தமிழக-கேரள எல்லையில் வாகனங்கள் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?
தமிழக-கேரள எல்லையில் திடீரென அரசு பேருந்துகள் உள்பட வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் திடீரென வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அமல்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்துவதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இடுக்கி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய வனத்துறை சமீபத்தில் அறிவித்தது. எனவே வனப்பகுதியின் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லைக்குள் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், ஆகியவை இருக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது
இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளான கேரள காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் திடீரென இன்று போராட்டம் நடத்துவதால் அரசு பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது