திருப்பதி கோயில் லட்டு ஆய்வறிக்கை தெளிவாக இல்லை என உச்சநீதிமன்றம் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்ததாக தகவல்கள் உள்ளன.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசின் போது திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகள் கொழுப்பு கலந்ததாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்
மேலும், லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வறிக்கையும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில், லட்டு விவகாரத்தில் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என்றும், சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து டிசம்பர் மாதம் ஆய்வறிக்கையை வெளியிட்டதற்கான காரணம் என்ன? முதல்வர் பதவியில் இருக்கும் நீங்கள் ஏன் இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் எடுத்துச் சென்றீர்கள்? அரசியலில் இருந்து கடவுளை தள்ளி வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ள மாநில அரசு, அந்த குழுவின் அறிக்கை வருவதற்கு முன் ஆய்வு அறிக்கை வெளியிட்டது என்றால், அது ஏன் என கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.