கொரோனா 2 வது அலை இந்தியாவில் இன்னும் ஓயவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா 2 வது அலை இந்தியாவில் இன்னும் ஓயவில்லை. குறிப்பாக மணிப்பூர், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொற்று பரவல் என்பது மீண்டும் அதிகரித்துள்ளது என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் 12 மாநிலங்களில் மொத்தம் இதுவரை 56 நபர்கள் உருமாறிய டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 2 வது அலை ஓய்ந்துவிட்டதாக கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.