கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் இரண்டாவது அலை ஓய்ந்துவிட்டதாக எண்ண வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,99,77,861 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் கொரோனா தொற்று கண்டறியப்படும் விகிதம் தொடர்ந்து 14 நாட்களாக 5 சதவிகித்திற்கு கீழ் உள்ளது. இதனால் இரண்டாவது அலை ஓய்ந்துவிட்டதாக எண்ண வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் தொற்று கண்டறியப்படும் விகிதம் 5 சதவிகித்திற்கு கீழ் குறைந்து அது 2 வாரத்திற்கு மேல் நீடித்தால் மட்டுமே 2ஆவது அலை ஓய்ந்து விட்டதாக உறுதிபட கருத முடியும் எனவும் மருத்துவ குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.