இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,667 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,21,56,493 ஆக உயர்ந்தது. புதிதாக 478 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,30,732 ஆக உயர்ந்தது.
மேலும், தொற்றில் இருந்து ஒரே நாளில் 35,743 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,13,38,088 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,87,673 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 53,61,89,903 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 63,80,937 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.