இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையால் உலகிலேயே தற்போது அதிக பாதிப்புகளை சந்தித்த நாடாக இந்தியா இருந்து வருகிறது. இதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தொற்றைக் குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் கடந்த ஒருவாரத்தில் இந்தியாவில் புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாகவும், ஆனாலும் இந்தியா தொடர்ந்து பாதிப்பில் முதலிடத்தில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. கடந்த 7 நாட்களில் இந்தியாவில் 18 லட்சத்து 46 ஆயிரத்து 55 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர்.