உத்திரபிரதேசத்தில் அவரச உதவி எண்ணுக்கு போன் செய்து சமோசா கேட்ட நபருக்கு நூதன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 32 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆறுதல் என்னவெனில் 102 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பதுதான்.
இதனால் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊரடங்கு சமயத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற அவசர உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், உத்திரபிரதேசத்தில் இந்த அவரச எண்ணுக்கு அழைத்து சமோசா வேண்டும் என ஒருவர் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒர் கட்டத்தில் அந்த நபர் கேட்ட படி சமோச வழங்க உத்தவிட்ட ஆட்சியர், அவனை கையோடு அழைத்து வந்து கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வைத்தும் உள்ளார்.