கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் உலகிலேயே இந்தியாவில்தான் பாதிப்பு எண்ணிக்கை குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சமாக உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் பலியாணவர்களின் எண்ணிக்கை 4.79 லட்சம் பேராக உள்ளனர். அதே போல இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4.4 லட்சமாகவும் பலி எண்ணிக்கை 14,323 ஆகவும் உள்ளது. தற்போது இந்தியாவில் பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் உலகளவில் கொரோனாவால் இறந்தவர்களை விட இந்தியாவில் இறப்பு விகிதம் கம்மியாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் லட்சம் பேரில் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைபவராக உள்ளார். ஆனால் உலகளவில் இந்த விகிதம் 6.06 ஆக உள்ளது. அதே விகிதம் இங்கிலாந்தில் 63.13, ஸ்பெயினில் 60.60, இத்தாலியில் 57.19, அமெரிக்காவில் .36.30, ஜெர்மனியில் 27.32, பிரேசிலில் 23.68, கனடாவில் 22.48, ஈரானில் 11.53, ரஷ்யாவில் 5.62 ஆகவும் உள்ளது.