இந்தியாவின் சமூக வலைதளங்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை ஏற்பது குறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் புதிய சட்டத்திட்டங்களுக்கு உடன்படுவது குறித்து வாட்ஸப் உள்ளிட்ட சில நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ட்விட்டரை பொறுத்தவரை இந்தியாவின் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ட்விட்டர் இந்தியா தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தாலும் தலைமையிலிருந்து தெளிவான ஒப்புதல் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அரசின் விதிமுறைகளை ட்விட்டர் ஏற்கிறதா அல்லது வெளியேறுகிறதா என்பது குறித்த விரிவான விளக்கத்தை கோரி ட்விட்டருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.