டெல்லியில் அனுமதி பெறாமல் வீடுகளில் சமைத்து ஆன்லைன் டெலிவரி செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது டெல்லி அரசு.
கொரோனா காரணமாக உணவகங்கள் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. இதனால் பெருநகரங்களில் தங்கி வேலை செய்துவந்த பேச்சிலர்களுக்கு உணவுக் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து பலரும் தங்கள் வீடுகளிலேயே சமைத்து ஆன்லைன் மூலமாக டெலிவரி செய்து வந்தனர்.
இப்படி சமைப்பவர்கள் தங்களை பதிவு செய்து கொள்வதில்லை என்றும், உணவுக் கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது டெல்லி அரசு.