கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை என தகவல் வெளியாகிறது.
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.
இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவி வருகின்றனர்.
இந்நிலையில், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.