திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையை தூர்தர்சன் ஒளிபரப்ப மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அரசு தொலைக்காட்சி சேனலான தூர்தர்சன் திரிபுரா முதல்வரின் 6 நிமிட உரையை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்புவதாக இருந்தது. இந்நிலையில் முதல்வரின் உரையில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் அனுப்புமாறு மாநில அரசுக்கு தூர்தர்சன் கேட்டுக்கொண்டது.
இதற்கு திரிபுரா அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து திரிபுரா முதல்வரின் உரையை தூர்தர்சன் ஒளிபரப்பவில்லை. இதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு மாநில முதல்வரின் உரையை ஒளிபரப்ப மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநில முதல்வர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.