Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளார் ஃபட்நாவிஸ்..!

ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளார் ஃபட்நாவிஸ்..!

Arun Prasath

, செவ்வாய், 26 நவம்பர் 2019 (16:06 IST)
தனது முதல்வர் பதவிய ராஜினாமா செய்ய முடிவெடுத்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அளிக்கவுள்ளார் ஃபட்நாவிஸ்.

மஹாராஷ்டிராவில் நிலவிவந்த அரசியல் குழப்ப சூழலில் த்டீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராகவும் , தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இதனை தொடர்ந்து பாஜகவின் வெற்றிக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளுநர் தனது பதவியை தவறுதலாக பயன்படுத்துகிறார் என வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
webdunia

இந்நிலையில் தற்போது அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தேவேந்திர ஃபட்நாவிஸும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஃபட்நாவிஸ், பாஜகவின் எண்ணிக்கை குறைந்த பிறகு சிவசேனா பேரம் பேச தொடங்கியது என குற்றம் சாட்டினார். மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் அளவு பாஜகவுக்கு இடங்கள் இல்லை என தெரிந்த பின்பு தான் சிவசேனா முதல்வர் பதவி கேட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஃபட்நாவிஸ் அளித்த பேட்டியில், மஹாராஷ்டிராவில் நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம் எனவும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

முதல்வரும் துணை முதல்வரும் ராஜினாமா செய்ததால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வராகும் உத்தவ் தாக்கரே? ஓய்ந்தது மகாராஷ்டிரா அரசியல் நாடகம்!