ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவுமே விவசாயிகள் போராட்டம் செய்கிறார்கள் என மத்திய அமைச்சர் ராதா மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி எட்டு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
விவசாயிகள் இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், 10 நாட்கள் எதிர்ப்பு போராட்டத்தினை கடந்த 1-ம் தேதி துவக்கினர்.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங், மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகிறது.
இதனை விவசாயிகள் உணராமல் ஏதோ ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவும் போராட்டத்தை நடத்துகின்றனர் என்று விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக ராதா மோகன்சிங் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.