பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்க்க்ண்ட் உயர்நீதிமன்றம்.
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனத தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் பீகார் முதல் அமைச்சராக இருந்த போது (1991 முதல் 1994 வரை) கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 960 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
அதாவது, பீகாரில் உள்ள பல அரசு கரூவூலங்களிலிருந்து பணம் எடுக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதில், அரசு கருவூலத்தில் இருந்து ரூ.89 லட்சம் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றாவாளி என உறுதியாகி லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழல் வழக்கில் சிக்கி 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்க்க்ண்ட் உயர்நீதிமன்றம். அதாவது, கால்நடை தீவன் விவகாரத்தில் சாய்பாச கருவூல வழக்கில் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தும்கா கரூவூல வழக்கு நிலுவையில் உள்ளதால் லாலு பிரசாத் சிறையிலேயே தொடர்ந்து இருப்பார் என தெரிகிறது.