சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக முக்கிய பிரபலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தயாக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் ராஜ்யசபா எம்பியுமான ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
அயோத்தி ராமர் கோயில் வழக்கில் இறுதி தீர்ப்பு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தான் வழங்கி இருந்தார் என்பதும் இன்று அயோத்தி ராமர் கோவிலில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது