சமீப காலமாக வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டினாலும் பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது சொந்த முயற்சியால் தனிவிமானத்தில் கிர்கிஸ்தானில் இருந்து அவர்களை வரவழைக்கவும், வேறு மாநிலங்களில் இருந்த புலம்பெயர் தொழிலார்கள் சொந்த ஊருக்குச் செல்லவும் பெரிதும் உதவி மக்கள்மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் விவசாயி நாகேஸ்வரராவ், ஒருவர் மாடுகளுக்கு பதில் தனது இரு வெண்ணிலா, சந்தனா என்ற இரு மகள்களைக் கொண்டு நிலத்தில் உழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதைப் பார்த்த சோனு சூட் அந்த விவசாயிக்கு டிராக்டர் வழங்கினார்.
அதாவது ஒரு மணிக்கு டிராகரில் நிலத்தை உழ ரூ.1500 ஆகும் எனவே பண வசதி இல்லாததால் மகள்களை வைத்து நிலத்தை உழ நாகேஸ்வரராவ் முடிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ ஞாயிற்றுக் கிழமை வைரல் ஆனதை அடுத்து இதைப் பார்த்த சோனு சீட் இன்று மாலையில் உங்கள் நிலத்தில் டிராக்டர் நிலத்தை உழும். நீங்கள் இருவரும் படிக்க வேண்டும் என சிறுமிகளுக்கு அறிவுறுத்தினார்.
சொன்னபடி நேற்று டிராக்ட அவர்கள் வீடுகளுக்கு வந்தது. இரு மகள்களின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.