கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து குறைந்து வந்த சமைல் கேஸ் சிலிண்டர்களின் விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.
இந்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயுக்களை வழங்கி வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் போல கேஸ் சிலிண்டர்களின் விலையும் கடந்த ஆறு மாதங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த கேஸ் சிலிண்டர்களின் விலை நேற்று விலைக் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேஸ் சிலிண்டர்களின் விலை அவ்வப்போது எண்ணெய் நிறுவனங்களால் மாற்றப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலைமாற்றத்தால் கடந்த சில மாதங்களாக கேஸ் சிலிண்டர்களின் விலை குறைந்து வந்தன. கடைசியாக இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1 அன்று மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை 120.50 ரூபாயும், மானிய சிலிண்டரின் விலை 5.91 ரூபாயும் குறைக்கப்பட்டது.
ஆனால் இப்போது மீண்டும் கேஸ் சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வின் படி மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 42 ரூபாயும், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.08 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மானிய சிலிண்டரின் விலை ரூ 495.61 ஆகவும் மானியமில்லாத சிலிண்டர்களின் விலை ரூ.701.50 ஆகவும் உயர்ந்துள்ளது.