பெண் பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு, பெங்களூருவின் ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் வெளியே துப்பாக்கி குண்டுகளில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் 18 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவரான மனோஹர் யாதவே உட்பட இருவர் கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த உமேஷ் வண்டால், குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அப்போது, ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் 'பாரத் மாதா கி ஜே' மற்றும் சநாதன தர்மத்தை ஆதரிக்கும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் இந்த கொலைக்குப் பிரசுராம் வாக்மோர் மற்றும் மனோஹர் யாதவ் இருவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் 18 பேருக்கு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், இப்போது 16 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.