உத்தரப்பிரதேசத்தில் காட்டில் இருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுமியின் நடவடிகைகளில் விலங்குகளைப் போலவே காணப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கத்தர்னியாகட் என்ற வனப்பகுதியிலிருந்து ஒரு சிறுமியை அதிகாரிகள் மீட்டனர். அப்போது அந்த சிறுமியின் உடலில் ஏராளமான காயங்கள் மற்றும் தழும்புகள் இருந்தனர்.
மேலும், விலங்குகள் மத்தியிலேயே வளர்ந்ததால், மனிதர்களைப் பார்த்தாலே அந்த சிறுமி கூச்சல் எழுப்பி வந்தாள். மேலும், விலங்குகள் போலவே நடப்பது, சாப்பிடுவது என அவளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது. தற்போது அந்த சிறுமியை அரசு குழந்தைகள் பாதுகாப்பகத்தில் வைத்து அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்த சிறுமியின் பெற்றோர்கள் யார்? அவள் எப்படி காட்டுகள் வந்தாள் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.
தற்போது அந்த சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மனிதர்களை பார்த்து கூச்சல் போடுவதை நிறுத்திவிட்டாள் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.