வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அந்த மசூதி இந்து கோவிலை இடித்துக்காட்டியது என இந்துக்கள் கூறி வருகின்றனர்..
இது குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறப்படும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதி ஏற்கனவே சிவலிங்கம் கோயில் ஆக இருந்ததாகவும் அவுரங்கசீப் காலத்தில் தான் அதை இடித்து ஞான வாபி மசூதியாக கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்த வழக்கில் ஞானவாபி மசூதியில் அகழாய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்து உள்ளது
வாரணாசி நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிராக மசூதி கமிட்டி தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவை அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.