கோவாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதற்கு தீர்வு காண நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தகோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த கோவா சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸூம், 13 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது. மற்ற கட்சியினர் மீதமுள்ள 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆட்சி அமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பாஜக குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடிக்க பார்க்கிறது. ஜனநாயகத்திற்கு எதிராக பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது என காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது.
இதனை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்சநீதிமன்றம், கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை மறுநாள் (16.03.17) நடைபெறுகிறது.