Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கிய பஹ்ரைன் அரசு !

பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கிய பஹ்ரைன் அரசு !
, ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (17:01 IST)
பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் பயணமாக பிரான்ஸ், பஹ்ரைன், ஐக்கிய அமீரகம், ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு சென்றார்.
அங்கு அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனை பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்தார். பின்னர் அங்கிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு மோடி சென்றார். இந்த நாட்டுக்கு பிரதமர் மோடி செல்வது இதுவே முதல்முறையாகும்.
 
அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு  பஹ்ரைன் இளவரசர் கலிபா இன் சல்மான் அல் கலிபா சிறப்பான வரவேற்பு அளித்தார்.  இருவருக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. அதில் இருவரும்  பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். அப்போது  பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்தார். 
 
பின்னர் இந்தியாவுக்கும் - பஹ்ரைனுக்கும் இடையே வலுவான நட்புறவு ஏற்படவே பிரதமர் மோடிக்கு பஹ்ரைன் நாட்டின் மிக உயரிய விருதான அரசர் ஹமாத்தின் பேரிலான மறுமலர்ச்சி விருது வழங்கப்பட்டது. மேலும் பஹ்ரைன் சிறையில் உள்ள 250 கைதிகளுக்கு நல்லெண்ண அடிப்படையில்  விடுதலை செய்யப்படவுள்ளனர் என பிரதமர் அலுவகமும் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மேலும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் காட்டுத் தீயை அணைக்க 8 லட்சம் தீயணைப்பு வீரர்கள்...