கடந்த 20 வருடமா குஜராத்தை தன்வசம் வைத்துள்ள பாஜக வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெறுமா என்ற சந்தகேகம் எழுந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்படி குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி மற்றும் மற்ற விவரங்களை தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி டெல்லியில் தற்போது டெல்லியில் தெரிவித்து வருகிறார்.
182 தொகுதி கொண்ட குஜராத் மாநிலத்தில் கடந்த தேர்தலை விட தற்போது கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கை 50,128 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். அதன்மூலம் எந்த தவறும் நடக்காமல் அனைத்தும் கண்காணிப்பில் இருக்கும்.
2 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 9ஆம் தேதியும் இரண்டாவது கட்டமாக டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும்.
தேர்தல் நடைமுறைகள் குஜராத் மாநிலத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.28 லட்சம் வரை செலவிடலாம். வேட்பாளர்களின் செலவினங்கள் பறக்கும் படை மூலம் கண்காணிக்கப்படும். மேலும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்துள்ளார்.
தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சி பாஜக தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கூட்டணியுடன் களமிறங்கினாலும் வெற்றிப்பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை பாஜக ஆட்சியில் நீடித்து வருகிறது. இருந்தாலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு நாடு முழுவதும் உள்ள சமானியர்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில் ஜி.எஸ்.டி பாஜக வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.