குஜராத்தில் விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு நிதியளிக்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பலருக்கு தங்கள் பணி நிமித்தமான பல்வேறு செயல்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், குஜராத்தில் விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்க நிதியுதவி செய்ய குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் வானிலை நிலவரம், நவீன பண்ணை தொழில்நுட்பங்கள், விவசாய உத்திகள் என பலவற்றையும் அதன்மூல்ம் அறிந்து கொள்ள முடியும் என்பதால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.