மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்
கடந்த சில மாதங்களுக்கு முன் மணிப்பூரில் இன கலவரம் நடந்த போது எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். ஆனால் பாராளுமன்ற கூட்டம் முடிந்த அடுத்த நாளே எந்த அரசியல்வாதியும் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசவில்லை.
இந்த நிலையில் மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. பதட்டம் ஏற்பட்டுள்ள ஒரு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆயுத குழுவினர் இன்று அதிகாலை 3 மணி அளவில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இந்த துப்பாக்கி சூட்டில் குகி இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் மீண்டும் மணிப்பூரில் பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.