அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ஹிந்து கோவில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்தான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அமர்வின் நீதிபதி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வழக்கு விசாரிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து அமைப்பான ராம் லல்லா விராஜ்மன் தரப்பில் வாதிட்ட மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், இந்திய தொல்பொருள் ஆய்வு அறிக்கைகளின்படி சர்ச்சைக்குரிய இடத்தில் ஆமை சிலைகளும் முதலை சிலைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு அந்நியமானது. ஆதலால் இங்கிருந்த கோவில் இடிக்கப்பட்டு தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என வாதாடினார். இதை தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.