நான் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஏகலைவன் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்கமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இருந்தால் மட்டுமே பெரிய பதவிகளில் நீடிக்க முடியும் என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் சமீபத்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மாநிலங்களவையில் பேசிய போது, நான் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏகலைவன் ஆனேன் என்று கூறியுள்ளார்
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நாட்டுப்பற்று கொண்டவர்கள் என்றும் தங்களைப் பற்றி சிந்திக்காமல் சமூகத்தை பற்றி மட்டுமே நினைப்பவர்கள் என்றும் அவர் மாநிலங்களவையில் பேசி உள்ளார். மேலும் மாநிலங்களவையில் ஆர்எஸ்எஸ் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய கருத்துக்களை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏகலைவன் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.