மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை 'I.N.D.I.A' கூட்டணி எம்பிகள் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் 'I.N.D.I.A' கூட்டணி குழுவில் உள்ள எம்பிகள் மணிப்பூர் நேரடியாக சென்று அங்கு கள ஆய்வு சென்றனர். இதனை அடுத்து தற்போது அந்த குழு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை சந்தித்து மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்த போவதாக தகவல் அறியாகி உள்ளன.
'I.N.D.I.A' கூட்டணி எம்பிக்கள் குழு நாளை குடியரசு தலைவரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.