வருமான வரி செலுத்துபவர்களின் ரீபண்ட் பணம், ரூ.5 லட்சம் வரை நிலுவை இருப்பவர்களுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளதை அடுத்து உடனடியாக 14 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி ஜி.எஸ்.டி., கலால் வரி பிடித்தத்தை உடனடியாக விடுவிக்க என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்த உத்தரவால் சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்கள் சுமார் 1 லட்சம் பேர் பயன்பெறுவர் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவுகளால் அரசுக்கு ரூ.18,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்றாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் மக்கள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் இழப்பை சரி செய்ய, கடந்த மாதம் ரூ.1.70 லட்சம் கோடி வரையில் மத்திய நிதித்துறை ஒதுக்கியது என்பதும் இந்த தொகை ஏழை எளிய மக்கள் மற்றும் வெளி மாநில தொழிலாளர்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது