Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆட்டத்தில் டெல்லி அரசு: ஆம் ஆத்மி கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!!

ஆட்டத்தில் டெல்லி அரசு: ஆம் ஆத்மி கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!!
, செவ்வாய், 28 நவம்பர் 2017 (16:58 IST)
டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சி முறையான வருமானவரி செலுத்தாத காரணத்துக்காக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி கடந்த 2014- 2015 ஆம் ஆண்டுகளில் கட்சிக்கு நன்கொடை பெற்றதில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
 
30 கோடி ரூபாய் அபராதம் செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 7ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி பெற்ற நன்கொடைகள் அனைத்துமே சட்டத்துக்கு புறம்பானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், வரி செலுத்த வேண்டிய வருமானத்துக்கு வரி செலுத்தாதது தொடர்பாக 30 கோடியே 67 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய வரலாற்றில், ஒரு கட்சியின் நன்கொடைகள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிகளுக்கு எல்லாம் கணக்கு உள்ளது. அரசியல் பழிவாங்கும் முயற்சியின் உச்சம் இந்த நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலாற்றில் முதல்முறையாக திண்டாடும் கோககோலா