கொரனோ பாதிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது இந்தியா
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 10க்கும் அதிகமான இடத்தில் இருந்த இந்தியா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான்காவது இடத்துக்கு முன்னேறியது
அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து நான்காவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ரஷ்யாவில் பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தினந்தோறும் சுமார் 20 ஆயிரம் பேர்களுக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ரஷ்யாவில் பெருமளவு குறைந்துள்ளது என்பதும் இந்தியா முன்னேற ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது
இன்னும் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இந்தியாவுக்கு முன் உள்ள நிலையில் இதே ரீதியில் சென்றால் மிக விரைவில் இரண்டாவது இடத்தையும் அதன் பின் முதலிடத்தையும் இந்தியா பிடிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 2,982,928 பேர்கள் என்பதும், பிரேசிலில் 1,604,585 பேர்கள் என்பதும், இந்தியாவில் 697,836 பேர்கள் என்பதும், ரஷ்யாவில் 681,251 பேர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது