இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் இரண்டாவது அலை தாக்க வாய்ப்பிருப்பதாக தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது. பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை உருவாக தொடங்கியுள்ளது. இதனால் லண்டன், பிரான்ஸில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவர் வி.கே.பால் “ஐரோப்பாவில் குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லை என மறுக்க முடியாது. நமது நாட்டில் 90% மக்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.