Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 46 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 46 ராக்கெட்
, புதன், 22 மே 2019 (08:06 IST)
இந்தியாவின் பிஎஸ்எல்சி சி-46 ராக்கெட் ரேடார் செயற்கைக்கோளுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனைய்டுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
பூமியைக் கண்காணிக்க ரீசாட் 2பி ஆர்1 என்ற புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கி இருந்தது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5 மணி 27 நிமிடங்களுக்கு சரியாக திட்டமிட்டபடி ஏவப்பட்டது.
 
இந்த செயற்கைக்கோளின் உதவியால் பகலில் மட்டுமின்றி இரவிலும் பூமியைத் தெளிவாக படம் பிடிக்க முடியும். அதுமட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் இந்த செயற்கைக்கோள் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் வகையில் அதிநவீன புகைப்பட சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூமியைத் தெளிவாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும்.
 
webdunia
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து இஸ்ரோ தலைவர் சிவன், பிஎஸ்எல்வி சி-46 மூலம் ரீசாட்-2பி செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக சந்திராயன் -2ஐ  வரும் ஜூலை 9ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விண்கலம் செப்டம்பர் 6ம் தேதி சந்திரனில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவுதினத்தை முன்னிட்டு சுப. உதயகுமார் கைது