இந்தியாவிலிருந்து அவ்வப்போது செயற்கை கோள்களுடன் கூடிய ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு ராக்கெட்டை ஏவுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன
நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா என்ற பகுதியில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கவுண்ட்டவுன் தொடங்கும் என்றும் இந்த கவுண்டவுன் நாளை மாலை 3.02 முடிவடைந்து ராக்கெட் விண்ணில் பாயும் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த செயற்கைகோள் இந்த ராக்கெட்டில் இ.ஓ.எஸ் 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அனுப்ப உள்ளதாகவும் வணிகரீதியில் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளை சேர்ந்த ஒன்பது பன்னாட்டு செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட வைப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் அடுத்த சாதனையான இந்த ராக்கெட்டின் வெற்றியை நாளை நாடே எதிர்பார்த்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது