Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வானிலிருந்து தாக்கி அழிக்கும் அஸ்த்திரா: இந்தியாவின் புதிய ஏவுகணை!

வானிலிருந்து தாக்கி அழிக்கும் அஸ்த்திரா: இந்தியாவின் புதிய ஏவுகணை!
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (18:15 IST)
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வானத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விண்வெளி மற்றும் இராணுவ பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் வெளிநாடுகளிடமிருந்து தளவாடங்கள் வாங்கும் அதேசமயம் உள்நாட்டில் தளவாட உற்பத்தி செய்வது குறித்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா. சமீபத்தில் தரையிலிருந்து புறப்பட்டு வெண்வெளியில் செல்லும் சாட்டிலைட்டுகளை தாக்கும் புதிய ரக ஏவுகணையை சோதித்து அதில் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் வானத்தில் உள்ள இலக்குகளை வானத்தில் இருந்தே அழிக்கும் ஏவுகணையை உருவாக்கும் புதிய முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது. இந்த ஏவுகணைக்கு அஸ்திரா என்று பெயரிட்டிருந்தார்கள்.

இன்று ஒடிசா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நிகழ்வில் போர் விமானத்திலிருந்து புறப்பட்ட அஸ்திரா வெற்றிகரமாக வானில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சென்று தாக்கியதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அஸ்திரா ஏவுகணை மூலம் எதிரி நாடுகள் ஏவும் ஏவுகணைகளை வானத்திலேயே தாக்கி அழிக்க முடியும் என கூறப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டில் கணவர்... இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர் ? தர்ம அடி கொடுத்த மக்கள்...