நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக இந்திய தபால் துறை 1 கோடி தேசிய கொடிகளை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடி ஆகஸ்டு 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை மாட்டி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் தேசிய கொடி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. தேசிய கொடிகள் தபால் அலுவலகங்கள் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 1.45 லட்சம் தபால் அலுவலகங்கள் மூலம் கடந்த 10 நாட்களில் 1 கோடி தேசிய கொடிகள் விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரூ.25 க்கு விற்கப்படும் இந்த கொடிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படுவதாகவும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.