வெறும் ரூ.4.79 லட்சத்தில் மின்சார கார்: ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மின்சார காரை அதிகம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் மின்சார காரின் விலை அதிகம் என்பதால் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் காராக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப்நிறுவனம் வெறும் 4.79 லட்சத்திற்கு மின்சாரத்தை தயாரித்து அசத்தியுள்ளது
மும்பையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ள மின்சார காரின் விலை 4.79 லட்சம் என்றும் இதில் பல்வேறு விதமான நவீன வசதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்தியாவிலேயே மிகவும் விலை குறைந்த இந்த மின்சார காரை தயாரித்துள்ள நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த காரை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் உள்ளது என்றும் ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது