உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் உள்ள குறையை கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு நிறுவனம் ரூபாய் 38 லட்சம் பரிசு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் உள்ள தொழில்நுட்பக்கோளாறை ஜெய்ப்பூரை சேர்ந்த இந்திய மாணவர் கண்டுபிடித்துள்ளார்
இன்ஸ்டாகிராமில் ஒருவரது ஐடி மற்றும் பாஸ்வேர்ட் இல்லாமல் யார் வேண்டுமானாலும் டிபிஐ மாற்றலாம் என இருந்த குறையை அவர் கண்டுபிடித்து மெட்டா நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து அந்த குறையை சரி செய்ய ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனம் இந்திய மாணவருக்கு ரூ.38 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இது குறித்து தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இந்திய மாணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.