Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

உத்தரபிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து - 96 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து - 96 பேர்  பலி
, ஞாயிறு, 20 நவம்பர் 2016 (11:40 IST)
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புக்ராயன் அருகே, இன்று அதிகாலை 3 மணியளவில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் இதுவரை 96 பேர் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பாட்னாவிலிருந்து இண்டூர் செல்லும் விரைவு ரயில், கான்பூர் அருகே உள்ள புகாரியா எனும் இடத்தில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் விபத்துக்குள்ளானது.
 
அதிகாலை நேரம் என்பதால், பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். விபத்து ஏற்பட்டதும், அவர்கள் அலறியடித்த படி திடுக்கிட்டு எழுந்தனர்.  14 பெட்டிகளில் இருந்த பயணிகளில் இதுவரை 96 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
 
மேலும், 150 பேருக்கும் மேலானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
 
அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. அதேபோல், விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 ஆண்டு கால சிறை வாழ்க்கை - சுயசரிதை வெளியிடும் நளினி