Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொரொனாவுக்கு ஊசியில்லாத தடுப்பு மருந்து

கொரொனாவுக்கு  ஊசியில்லாத தடுப்பு மருந்து
, திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (21:12 IST)
கொரொனா தொற்றிற்கு ஊசியில்லாத தடுப்பு மருந்தான கெடிலாவுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனா 3 வது அலை வரும் ஆகஸ்ட் மாதம் கடைசியில் ஆரம்பித்து, அக்டோபர் மற்றும் நவம்பர் மாத தொடக்கத்தில் சுச்சம் அடைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகிறது.

கடந்த வருடம் பரவிய முதலாவது அலை மற்றும் இந்த வருடத் தொடக்கத்தில்பரவிய இரண்டாம் அலைகளை விட வரப்போகிற 3 வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இதுவரை பாதிப்பு ஏற்படாத இடஙக்ளில் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிட் தொற்றிற்கு ஊசியில்லாத தடுப்பு மருந்தான கெடிலாவுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது. இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் தயாராகும் கெடிலா என்ற நிறுவனத்தின் தடுப்பு மருந்திற்கு அனுமதி கிடைத்தால் இந்தியாவில் இது  6 வதாக மக்களின் பயன்பாட்டிற்கு வரும்ம மருந்து ஆகும். மேலும் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தில் தடுப்பூசி 3 டோஸ்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டுநர் இல்லாமல் பின்னோக்கி சென்ற மின்சார ரயில்: அரக்கோணத்தில் பரபரப்பு