ஜார்கண்ட் மாநிலத்தில் 77 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் அதிகபட்சமாக 50% இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ள நிலையில் தமிழகம் மட்டும் விதிவிலக்காக 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் 77 சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதா நிறைவேறி உள்ளது. அந்த மசோதாவில் ஓபிசிக்கு 27%, எஸ்.டிக்கு 28%, எஸ்.ஈக்கு 18% சதவீதம் என இட ஒதுக்கீடு விகிதத்தை அதிகரித்து இருந்தது
இந்த நிலையில் 77% இட ஒதுக்கீடு குறித்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.