ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி அதிவேக இண்டர்நெட் பிராண்ட்பேன்ட் சேவை வரும் செப் 19 முதல் ஆரம்பம் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய ஜியோ 5ஜி சேவை பெருநகரங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ளது. வரும் டிசம்பருக்குள் இந்தியா முழுவதும் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும்
மேலும் ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்திற்கான அறிமுக பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி பிராண்ட்பேன்ட் சேவை அடுத்த சில வருடங்களில் நாடு முழுவதும் சுமார் 200 மில்லியன் வீடுகளில் இணைக்கப்பட உள்ளது என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.