கர்நாடகாவில் அரசு மருத்துவர் ஒருவர் கொரோனா வார்டில் முழு நேரம் பணியாற்ற சொன்னதால் வேலை விட்டு ஆட்டோ ஓட்டி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாவட்டத்தின் பெல்லாரி மாவட்டத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத். கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கு மருத்துவம் பார்த்து வந்த இவரை கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்ற அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் விடுப்பே இல்லாது தினமும் பணியாற்ற அதிகாரிகள் அவரை வற்புறுத்தவே அவர் மறுத்துள்ளார்.
இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் ரவீந்திரநாத்தை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளனர். பிறகு மீண்டும் வேலைக்கு சேர்ந்த ரவீந்திரநாத்தை சரியாக பணி செய்யவிடாமல் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வெறுப்படைந்த ரவீந்திரநாத் இத்தனை ஆண்டுகளாக தான் மேற்கொண்ட மருத்துவர் பணியை துறந்து ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டி வருகிறார். ஆட்டோவின் முகப்பில் ஐஏஎஸ் அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவன் நான் என எழுதியுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.