திரையரங்குகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்களின் நலனை கணக்கில் கொண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் ஒரு சில அதிரடி அறிவிப்புகளை அறிவித்துள்ளதால் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கேரளாவில் உள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் முதல் 10 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன என்பதும், இன்று முதல் திரையரங்குகள் அங்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் சில சலுகைகளை திரையரங்கு உரிமையாளர்களுக்கு அளித்துள்ளார். கேரளாவில் உள்ள திரையரங்குகளுக்கு மார்ச் மாதம் வரை கேளிக்கை வரி கிடையாது என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளில் மின்சார கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என்றும் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவித்துள்ளார்
கேரள அரசின் இந்த அதிரடி சலுகை காரணமாக அம்மாநில தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதேபோன்று தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களிலும் திரையரங்கு உரிமையாளர்களின் நலனை கணக்கில்கொண்டு அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது