கடந்த மே 28 ஆம் தேதி துவங்கிய பருவமழை கேரளாவை புரட்டிப் போட்டது, சுமார் 483 பேர் மழை, வெள்ளம், நிலச்சரிவு இயற்கை பேரிடருக்கு பலியாகியுள்ளனர். பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
எனவே, கேரள அமைச்சகம் கடந்த வாரம் வெள்ள நிவாரண நிதி திரட்ட வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடம் செல்ல முடிவெடுத்தது. இதற்காக அதிகாரிகள், அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழுவையும் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், இதனை கடுமையாக விமர்சித்துள்ளது கேரள காங்கிரஸ். அயல்நாட்டு வாழ் கேரளாக்காரர்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி கேரள மக்களை இழிவு படுத்தக் கூடாது.
அயல்நாடுகளுக்கு பிச்சைப் பாத்திரம் ஏந்தி அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அனுப்ப வேண்டாம். இது கேரள மக்களின் சுயமரியாதைக்கும், கவுரவத்துக்கும் இழுக்காகும்.
மேலும் அயல்நாட்டில் கவுரவத்துடன் வாழும் இந்தியர்களையும் கேரள மக்களையும் இழிவு படுத்தாதீர்கள் என்று காட்டமாக விமர்சித்துள்ளனர்.