மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 மசோதாக்கள் ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் நிலுவையில் உள்ளன என கேரள அரசு தனது ரிட் மனுவில் தெரிவித்துள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால தாமதம் செய்வதாகவும், மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் இதுவரை 13 மசோதாக்களை கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்திருப்பதாக தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் பாஜக தரப்பில் இது குறித்து விளக்கம் அளித்த போது 13 மசோதாக்களில் 12 மசோதாக்கள் ஒரே மசோதா என்றும் பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் தான் ஆக வேண்டும் என்ற மசோதாக்கள் தான் 12 மசோதாக்களாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.