கேரளாவில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த நபருக்கு பாஸ்போர்ட்டே திரும்ப வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த பாபு என்பவர் தனது பாஸ்போர்ட்டை வைக்க கவர் ஒன்று வாங்க விரும்பியுள்ளார். இதற்காக அமேசானில் அவர் ஆர்டர் செய்திருந்த நிலையில் அவருக்கு அனுப்பப்பட்ட பார்சலில் கவருடன் ஒரு உண்மையான பாஸ்போர்ட்டும் இருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாபு அமேசான் வாடிக்கை சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அங்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த பாஸ்போர்ட் திரிச்சூரை சேர்ந்த சலீம் என்பவரது என்பது தெரிய வந்த பாபு அவரிடம் தொடர்பு கொண்டு இதை கூறியுள்ளார்.
சலீம் சில நாட்கள் முன்பு பாபு போலவே பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அது பிடிக்காததால் திரும்ப அனுப்பும்போது மறதியாக தனது பாஸ்போர்டையுமே கவரோடு அனுப்பியுள்ளார். அமேசான் ஊழியர்கள் அதை கவனிக்காமல் அதை அப்படியே மீண்டும் பாபுவுக்கு அனுப்பியுள்ளனர் என பின்னர் தெரிய வந்துள்ளது.