கர்நாடக மாநில வரலாற்றில், தனது 60 மனைவிகளை ஒரே சமயத்தில் கொன்று புதைத்த மன்னன் அப்சல் கான் என்ற நிகழ்வு இடம்பெற்றிருக்கும்.
தற்போதைய கர்நாடக மாநிலத்தில் 1659 ஆம் ஆண்டு பிஜாப்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஜோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்த அப்சல் கான் மன்னர் சிவாஜியை எதிர்த்து போரிடும் முன்னர் ஜோதிடரை அழைத்து இந்த போரில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்டுள்ளார்.
ஜோதிடர் சிவாஜி வெற்றி பெருவார் என்றும் நீ அவரின் கையால் கொல்லப்படுவார் என்று கணித்து கூறினார். அதை கேட்டு அதிர்ந்து போன அப்சல் கான் பின்னர் தனது மனதை தேற்றிக்கொண்டார்.
ஒருவேளை தான் இறந்துவிட்டால், தன் மனைவியர்களை வேறுயாரும் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அப்சல் கானின் 60 மனைவிகளின் கல்லறைதான் இப்பொழுது உள்ள சுற்றுலா தளமான சாத் கபார்.