கடந்த 2010ஆம் ஆண்டு மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் பெற்றவரும் நடிகையும் மாடலுமான உசோஷி சென்குப்தா என்பவரிடம் ஏழு பேர் பாலியல் அத்துமீறல் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு சப் இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது
நடிகை உசோஷி சென்குப்தா நேற்றிரவு கொல்கத்தாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் தனியார் கேப் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பயணம் செய்த காரை திடீரென வழிமறித்த பைக்கில் வந்த ஏழு பேர் டிரைவரை அடித்து உதைத்து விரட்டி அடித்தனர். பின்னர் உசோஷி சென்குப்தாவிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ரோந்து போலீஸ், உசோஷி சென்குப்தாவை காப்பாற்றியதுடன் அவரிடம் அத்துமீறிய ஏழு பேரை வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மிஸ் இந்தியா பட்டம் பெற்ற ஒரு பெண்ணை ஏழு பேர் இணைந்து பாலியல் தொல்லை கொடுத்ததும், அவர்களுக்கு ஒரு சப் இன்ஸ்பெக்டரே உடந்தையாக இருந்ததும் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது